Monday, 16 October 2017

யோகா

யோகா

யோகா என்பது உடல் மனம் ஆன்ம இவைகளை இனைக்கும் ஒரு பழமையான கலை.
இது சமையம் அல்ல இது ஒரு கலை ஆகும்
இக்கலையை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் நமக்கு மன அமைதி உடல் ஆரோக்கியம் ஆகும்
யோகா என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருதம் வாரத்தில் இருந்து தோன்றியது . இதன் பொருள் இணைதல் பிணைதல் ஒன்று சேருதல் ஆகும் .
யோகம் ஒரு மிக சிறந்த கொள்கையை ஒத்துள்ளது இது உறங்கிக்கொண்டு இருக்கும் தெய்வீகமான ஆக்க சக்தியான குண்டலினி அல்லது சார்ப சக்தி யின் மகிமையை பற்றி கூறுகிறது .ஒவ்வொரு யோகிகளின் நோக்கமானது இந்த குண்டலினி சக்தியை சூழ்முனை வழியாக ஒவ்வொரு சக்கரம் வழியாக மேலேற்றி கடைசியாக சஹஸ்சாரத்தை சென்று அடைவது.
இந்த நிலையை அடைந்தோர் நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் கட்டுபடுத்தி இருதயத்தின் துடிப்பையும் அடக்க முடியும்.
உணவு நீரில்லாமல் குறிப்பிட்ட சிலா கால நேரங்கலுக்கு உயிர் வாழ முடியும் இச்சாதனையை சில யோகிகள் செய்து காண்பித்துள்ளனர்.
மேற்கத்தியர்கள் இந்த யோக பயிற்சிகளை எந்த மதத்துடனும் ஒப்பிடாமல் செய்கின்றனர்.





யோகத்தின் பயன்கள்
ü  நம்முடைய வேலை மற்றும் படிப்பில் தீவிர சிந்தனை தந்து அதன் திறனை கூட்டும் .
ü  ஒருவனை சரியான நேரத்தில் சரியான விதத்தில் சரியானவற்றை செய்ய உதவும் .
ü  தற்கால வாழ்வில் மனிதனின் நோயை நீக்கும் மற்றும் தடுக்கும் அறிய மருந்து .
ü  தன்னைதானே உணர்ந்து மேலோங்கசெய்யும் ஒரு கலை.
ü  அறியாமை பற்று உள்ளடக்கிய சோகங்கள் இவைகளில் இருந்து நம் மனதை வேற்றுமை அடையச்செய்து அதை அழிக்கும் .
ü  ஆன்மபலம் அளிக்கும் புத்தி கூர்மை தரும் நம் உணர்வுகளை அடக்கும் வழி கற்பிக்கிறது .
ü  இது மட்டுமே தன்னைதானே உணரும் ஒரு பயணத்தின் ஒரு வாகனமாக இருந்து அறியாத பல எல்லைகளை கடந்து மனிதனின் ஆழ்மனதிலுள்ள தன்னை உணர செய்யும் .
ü  உடல் மனம் பலப்படும் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் இளமையுடன் வாழலாம்.
ü  இவை மற்றும் இன்றி எண்ணற்ற பல அற்புத பயன்கள் உள்ளன.






யோகாவின் வகைகள்
·         கர்மயோகம்
·         பக்தியோகம்
·         ஞானயோகம்
·         ராஜயோகம்
·        ஹதயோகம்
·         வாசியோகம்
·         குண்டலினியோகம்
·         லயம்யோகம்
·         கிரியாயோகம்
   
இவற்றில் நாம் பயிலும் யோகா ஹத யோகா -சூரியன்
(ட)த-சந்திரன் என்று பொருள்.

அஷ்டம் என்பது எட்டு என்று பொருள்.



அட்டாங்க யோகம்
    பதஞ்சலி இந்த வழிமுறைகளை எட்டு அங்கங்கலாய் கூறுகிறார்.இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் .அவர் காளத்தில் நிலவிய செய்திகளையும் தனது அனுபவத்தையும் தொகுத்து ‘யோகா சூத்ரா’ என்ற ஒரு நூலாக ஆக்கினார்.
யோகா கலையினை மிக விரிவாகவும் நுட்பமாகவும் எளிமையாகவும் இந்நூல் விளக்குவதால் காலங்களைக்கடந்தும்
 இன்று வரை நிற்கிற யோகா கலையினை முழுமையாகவும் முதன்மையாகவும் விளக்குகிறது.
மேலும் இந்நூலில் சாதகர் கைவல்ய விபூதி சமாதி என்று நான்கு பகுதிகளாகப் பிரித்து தொகுத்துள்ளார்.   


1.    இயம
2.    நியம
3.    ஆசன
4.    பிரணயாம
5.    ப்ரித்யகார
6.    தாரணா
7.    தியான
8.    சமதி

௩.௨௬௩.



அட்டாங்க  
         யோகக்கலை கற்று உலகவாழ்வில் வெற்றிபெற்று வாழ்வாங்கு வாழவேண்டும் என விரும்புகின்றவர் யாராயினும் அவர்கள் மேற்கண்ட எட்டுபடிகளினை  அறிந்து தெரிந்து முயன்று. பின் பயின்று ஆகவேண்டும்.



1.    இயமம் (சமுக ஒழுக்கம் )
2.    நியமம் (தனி மனித ஒழுக்கம்)
3.    ஆசனம் (இருக்கை)
4.    பிரணாயமம் (முச்சிப்பயிற்சி )
5.    பிரத்தியாகாரம் (பக்குவ நிலை)
6.    தாரணை (முதிர்ச்சி நிலை)
7.    தியனாம் (ஒருமுக படுத்துதல்)
8.    சமாதி (இறைநிலை உணருதல்
      

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 


No comments:

Post a Comment

வாழ்க வழமுடன்