இக்கால வாழ்கைக்கு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அடிப்படை யோகா பயிற்சிகள் விளக்கங்கள் அளிகபடுகின்றன தொடர்புக்கு V.PRAKASHUK 9789420023
Sunday, 5 November 2017
Sunday, 29 October 2017
யோகமுத்திரைகள்
யோகமுத்திரைகள்
நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு
வருவதே முத்திரைகள் ஆகும் முத்திரைகள் மூலம் உடல் உள் உறுப்பின் நரம்புகள்
இயக்கபடுகின்றன.
இப்பிரபஞ்சம் பஞ்ச பூதங்களினால்
உண்டாக்கப்பட்டது அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் என்பது போல நாம் உடலின் கை
விறல்களில் பஞ்சபூத தத்துவம் அடங்கியுள்ளன.
கட்டைவிரல் நெருப்பு மணிபூரகம்
ஆல்காட்டிவிரல் காற்று
அனாதகம்
நடுவிரல் ஆகாயம் விசுத்தி
மோதிரவிரல் பூமி மூலாதாரம்
சுண்டுவிரல் நீர்
சுவதிஸ்டாணம்
1.
அதி முத்திரை
2.
அஞ்சலி முத்திரை
3.
சின் முத்திரை (ஞான முத்திரை)
4.
வாயு முத்திரை
5.
சூன்ய முத்திரை (ஆகாஷ் முத்திரை)
6.
ப்ரிதிவ் முத்திரை
7.
வருணா முத்திரை
8.
ப்ராண முத்திரை
9.
அபான முத்திரை
10. அபான வாயு முத்திரை
11. லிங்க முத்திரை
12. கேசரி முத்திரை
1. அதி முத்திரை
2. அஞ்சலி முத்திரை
3. சின் முத்திரை (ஞான முத்திரை)
4. வாயு முத்திரை
5. சூன்ய முத்திரை (ஆகாஷ் முத்திரை)
6. ப்ரிதிவ் முத்திரை
7. வருணா முத்திரை
8. ப்ராண முத்திரை
9. அபான முத்திரை
10. அபான வாயு முத்திரை
11. லிங்க முத்திரை
12. கேசரி முத்திரை
Tuesday, 17 October 2017
Monday, 16 October 2017
ஐந்து வகை கோசங்கள்
ஐந்து வகை கோசங்கள்
1. அன்னமய
கோசம்
2. பிராணமய
கோசம்
3. மனோமய
கோசம்
4. விஞ்ஞானமய
கோசம்
5. ஆனந்தமய
கோசம்
சித்தர் தத்துவங்கள் 96
சித்தர் தத்துவங்கள் 96
சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்-அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள்என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும். இதை ஔவையார் ‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.
இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சித்தர்கள் இத்தத்துவங்களை தன் உடலையே சோதனைச்சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப்பெயர்களில் இவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர். அவை,
தத்துவங்கள் 96
- ஆன்ம தத்துவங்கள் -24
- உடலின் வாசல்கள் -9
- தாதுக்கள் -7
- மண்டலங்கள் -3
- குணங்கள் -3
- மலங்கள் -3
- வியாதிகள் -3
- விகாரங்கள் -8
- ஆதாரங்கள் -6
- வாயுக்கள் -10
- நாடிகள் -10
- அவத்தைகள் -5
- ஐவுடம்புகள் -5
ஆன்ம தத்துவங்கள் 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
- பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெரு
ப்பு) - ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
- கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
- தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
- அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)
பூதங்கள் 5
- நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,
உரோமம்) - நீர் உலகம் (நீர்) மனிதன் (உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,
இரத்தம்,விந்து,) - காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
- ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
- நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,
தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)
ஞானேந்திரியங்கள் 5
- மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்
மை அறியும் - வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,
கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும் - கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
- மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
- செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்
கர்மேந்திரியங்கள் 5
- வாய் (செயல்) சொல்வது
- கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,
ஏற்றல் - கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
- மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
- கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சி
றுநீரையும் வெளியேத் தள்ளும்
தன்மாத்திரைகள் 5
- சுவை சுவையறிதல்
- ஒளி உருவமறியும்
- ஊறு உணர்வறியும்
- ஓசை ஓசையறியும்
- நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங்கள் 4
- மனம்
- புத்தி
- சித்தம்
- அகங்காரம்
உடலில் வாசல்கள் 9
- கண்கள்-2
- செவிகள் -2
- முக்குத்துவாரங்கள் -2
- வாய் -1
- மலவாயில் -1
- குறிவாசல் -1
தாதுக்கள் 7
- சாரம் - (இரசம்)
- செந்நீர் (இரத்தம்)
- ஊன் (மாமிசம்)
- கொழுப்பு
- எலும்பு
- மூளை
- வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)
மண்டலங்கள் 3
- அக்னி மண்டலம்
- ஞாயிறு மண்டலம்
- திங்கள் மண்டலம்
குணங்கள் 3
- மனஎழுச்சி (களிப்பு,அகங்காரம்,போகம்,வீரம்
,ஈகை) - மயக்கம் (பற்று,தூக்கம்,சம்போகம்,திருட்
டு,மோகம்,கோபம்) - நன்மை (வாய்மை,கருணை,பொய்யாமை,கொல்லா
மை,அன்பு,அடக்கம்)
மலங்கள் 3
- ஆணவம் (நான் என்ற மமதை)
- மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
- வினை (ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)
பிணிகள் 3
- வாதம்
- பித்தம்
- கபம்
விகாரங்கள் 8
- காமம்,
- குரோதம்,
- உலோபம்,
- மோகம்,
- மதம்,
- மாச்சரியம்,
- துன்பம்,
- அகங்காரம்
ஆதாரங்கள் 6
- மூலம்
- தொப்புள்
- மேல்வயிறு
- நெஞ்சம்
- கழுத்து புருவநடு
- டம்பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10
- உயிர்க்காற்று
- மலக்காற்று
- தொழிற்காற்று
- ஒலிக்காற்று
- நிரவுக்காற்று
- விழிக்காற்று
- இமைக்காற்று
- தும்மல்காற்று
- கொட்டாவிக்காற்று
- வீங்கல்காற்று
நாடிகள் 10
- சந்திரநாடி அல்லது பெண்நாடி
- சூரியநாடி அல்லது ஆண்நாடி
- நடுமூச்சு நாடி
- உள்நாக்கு நரம்புநாடி
- வலக்கண் நரம்புநாடி
- இடக்கண் நரம்புநாடி
- வலச்செவி நரம்புநாடி
- இடதுசெவி நரம்புநாடி
- கருவாய் நரம்புநாடி
- மலவாய் நரம்புநாடி
அவத்தைகள் 5
- நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
- கனவு
- உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
- பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
- உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)
ஐவுடம்புகள் 5
- பருஉடல்
- வளியுடல்
- அறிவுடல்
- மனஉடல்
- இன்பஉடல்
யோகா
யோகா
யோகா என்பது உடல் மனம் ஆன்ம இவைகளை இனைக்கும் ஒரு பழமையான கலை.
இது சமையம் அல்ல இது ஒரு கலை ஆகும்
இக்கலையை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் நமக்கு மன அமைதி உடல் ஆரோக்கியம்
ஆகும்
யோகா என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருதம் வாரத்தில் இருந்து தோன்றியது
. இதன் பொருள் இணைதல் பிணைதல் ஒன்று சேருதல் ஆகும் .
யோகம் ஒரு மிக சிறந்த கொள்கையை ஒத்துள்ளது இது உறங்கிக்கொண்டு இருக்கும் தெய்வீகமான
ஆக்க சக்தியான குண்டலினி அல்லது சார்ப சக்தி யின் மகிமையை பற்றி
கூறுகிறது .ஒவ்வொரு யோகிகளின் நோக்கமானது இந்த குண்டலினி சக்தியை சூழ்முனை வழியாக
ஒவ்வொரு சக்கரம் வழியாக மேலேற்றி கடைசியாக சஹஸ்சாரத்தை சென்று அடைவது.
இந்த நிலையை அடைந்தோர் நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் கட்டுபடுத்தி இருதயத்தின்
துடிப்பையும் அடக்க முடியும்.
உணவு நீரில்லாமல் குறிப்பிட்ட சிலா கால நேரங்கலுக்கு உயிர் வாழ முடியும் இச்சாதனையை
சில யோகிகள் செய்து காண்பித்துள்ளனர்.
மேற்கத்தியர்கள் இந்த யோக பயிற்சிகளை எந்த மதத்துடனும் ஒப்பிடாமல்
செய்கின்றனர்.
யோகத்தின் பயன்கள்
ü நம்முடைய வேலை
மற்றும் படிப்பில் தீவிர சிந்தனை தந்து அதன் திறனை கூட்டும் .
ü ஒருவனை சரியான
நேரத்தில் சரியான விதத்தில் சரியானவற்றை செய்ய உதவும் .
ü தற்கால வாழ்வில்
மனிதனின் நோயை நீக்கும் மற்றும் தடுக்கும் அறிய மருந்து .
ü தன்னைதானே உணர்ந்து மேலோங்கசெய்யும்
ஒரு கலை.
ü அறியாமை பற்று உள்ளடக்கிய
சோகங்கள் இவைகளில் இருந்து நம் மனதை வேற்றுமை அடையச்செய்து அதை அழிக்கும் .
ü ஆன்மபலம் அளிக்கும்
புத்தி கூர்மை தரும் நம் உணர்வுகளை அடக்கும் வழி கற்பிக்கிறது .
ü இது மட்டுமே
தன்னைதானே உணரும் ஒரு பயணத்தின் ஒரு வாகனமாக இருந்து அறியாத பல எல்லைகளை கடந்து
மனிதனின் ஆழ்மனதிலுள்ள தன்னை உணர செய்யும் .
ü உடல் மனம் பலப்படும் வாழ்நாள்
அதிகரிக்கும் என்றும் இளமையுடன் வாழலாம்.
ü இவை மற்றும் இன்றி
எண்ணற்ற பல அற்புத பயன்கள் உள்ளன.
யோகாவின் வகைகள்
·
கர்மயோகம்
·
பக்தியோகம்
·
ஞானயோகம்
·
ராஜயோகம்
·
ஹதயோகம்
·
வாசியோகம்
·
குண்டலினியோகம்
·
லயம்யோகம்
·
கிரியாயோகம்
இவற்றில் நாம் பயிலும் யோகா ஹத யோகா ஹ-சூரியன்
(ட)த-சந்திரன் என்று
பொருள்.
அஷ்டம் என்பது எட்டு என்று பொருள்.
அட்டாங்க யோகம்
பதஞ்சலி இந்த
வழிமுறைகளை எட்டு அங்கங்கலாய் கூறுகிறார்.இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
.அவர் காளத்தில் நிலவிய செய்திகளையும் தனது அனுபவத்தையும் தொகுத்து ‘யோகா
சூத்ரா’ என்ற ஒரு நூலாக ஆக்கினார்.
யோகா கலையினை மிக விரிவாகவும் நுட்பமாகவும் எளிமையாகவும் இந்நூல் விளக்குவதால்
காலங்களைக்கடந்தும்
இன்று வரை நிற்கிற யோகா கலையினை
முழுமையாகவும் முதன்மையாகவும் விளக்குகிறது.
மேலும் இந்நூலில் சாதகர் கைவல்ய விபூதி சமாதி என்று நான்கு
பகுதிகளாகப் பிரித்து தொகுத்துள்ளார்.
1.
இயம
2.
நியம
3.
ஆசன
4.
பிரணயாம
5.
ப்ரித்யகார
6.
தாரணா
7.
தியான
8.
சமதி
௩.௨௬௩.
அட்டாங்க
யோகக்கலை கற்று உலகவாழ்வில் வெற்றிபெற்று வாழ்வாங்கு வாழவேண்டும் என
விரும்புகின்றவர் யாராயினும் அவர்கள் மேற்கண்ட எட்டுபடிகளினை அறிந்து தெரிந்து முயன்று. பின் பயின்று
ஆகவேண்டும்.
1.
இயமம் (சமுக ஒழுக்கம் )
2.
நியமம் (தனி மனித ஒழுக்கம்)
3.
ஆசனம் (இருக்கை)
4.
பிரணாயமம் (முச்சிப்பயிற்சி )
5.
பிரத்தியாகாரம் (பக்குவ நிலை)
6.
தாரணை (முதிர்ச்சி நிலை)
7.
தியனாம் (ஒருமுக படுத்துதல்)
8.
சமாதி (இறைநிலை உணருதல்
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Subscribe to:
Posts (Atom)